கோயில் பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-35/2025
நாள்:-20.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
கோயில் பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் நகர் வடக்கு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி மற்றும் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோயில் பாதுகாப்பு பணிக்கு (Temple Protection Force) தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 38 பணியிடங்களுக்கு, பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயில் பாதுகாப்பு பணிக்கு 62 வயதிற்குட்பட்ட உடல் திடகாத்திரம், தகுதியும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தங்கள் அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி விருப்பம் தெரிவித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.