மூடு

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட தேர்தல் அலுவலர்

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026

செ.வெ.எண்:-64/2026 நாள்:-24.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில்
தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.02.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 339 வாக்குச்சாவடி மையங்கள், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடி மையங்கள், 129-ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 341 வாக்குச்சாவடி மையங்கள், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்கள், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடி மையங்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள், 133-வேடசந்தூர் சட்டமன்ற
தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2301 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்திடும் வகையில் வாக்குச்சாவடிகளை அமைக்கவும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள நடைமேடை வசதி, தளவாட சாமான்கள், மேற்கூரை, தரை, காற்றோட்ட வசதி ஆகியவற்றை பராமரித்திடவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திட அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக
அனைத்து வசதிகளையும் செய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் க.ரெ.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும், 129- ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டத்து ஆவரம்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர்
மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும், 132- திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு
தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் மற்றும் 133- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாடிக்கொம்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 112 பதற்றமாக வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை
மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, திண்டுக்கல் மாநகராட்சி
ஆணையர் திரு.செந்தில்முருகன், உதவி ஆணையர் (கலால்) திரு.பிரபு, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் திருமதி.சுவேதா, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.மலரவன் அவர்கள் ஆகியோர் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.