”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-25/2025
நாள்: 11.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தகவல்
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.12.2025 என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.