மூடு

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024
.

செ.வெ.எண்:-06/2024

நாள்:-03.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு(2023-2024) மட்டும் 425 பணிகள் ரூ.13.90 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன, நடப்பு ஆண்டில்(2024-2025) 40 பணிகள் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.12.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி, சோழகுளத்துப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம், அஞ்சுகுழிப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், டி.பஞ்சபட்டி ஊராட்சி, கொசவப்பட்டியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமான பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கடந்த ஆண்டு(2023-2024) மட்டும் பல்வேறு திட்டங்களின் கீழ் 425 பணிகள் ரூ.13.90 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடப்பு ஆண்டில்(2024-2025) அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-(2024-2025)ன் கீழ், 4 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் ரூ.66.20 இலட்சம் மதிப்பீட்டிலும், 6 இடங்களில் நியாயவிலைக்கடை கட்டடங்கள் ரூ.76.20 இலட்சம் மதிப்பீட்டிலும், 4 இடங்களில் உணவு தானிய கிட்டங்கி ரூ.34.80 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 4 இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடடங்கள் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், 6 இடங்களில் அங்கன்வாடி மையக் கட்டடடம் ரூ.84.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 5 இடங்களில் உணவு தானியக் கட்டடங்கள் ரூ.63.35 இலட்சம் மதிப்பீட்டிலும், நபார்டு திட்டத்தின் கீழ் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ரூ.1.72 கோடி மதிப்பீட்டிலும் என நடப்பு ஆண்டில்(2024-2025) மட்டும் முக்கியப் பணிகளாக மொத்தம் 40 பணிகள் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர சிறுசிறு பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின்போது, அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ராஜாசீனிவாசன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.எஸ்.முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி சுமதி, திரு.இளையராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.