மூடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை 16,915 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2024
.

செ.வெ.எண்:-39/2024

நாள்:-14.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை 16,915 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.09.2024) பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று (14.09.2024) நடைபெறுகிறது.

அதன்படி, திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு மையங்களில் 16,950 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 12,518 தேர்வர்கள் (73.08%) தேர்வு எழுதினார்கள். 4,432 தேர்வர்கள் (26.14%) தேர்வில் பங்கேற்கவில்லை.

கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 369 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 263 தேர்வர்கள் (71.02%) தேர்வு எழுதினார்கள். 106 தேர்வர்கள் (28.72%) தேர்வில் பங்கேற்கவில்லை. பழனி வட்டத்தில் 21 தேர்வு மையங்களில் 5,374 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 4,134 தேர்வர்கள் (76.09%) தேர்வு எழுதினார்கள். 1,240 தேர்வர்கள் (23.07%) தேர்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 83 தேர்வு மையங்களில் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 16,915 தேர்வர்கள் (75%) தேர்வு எழுதினார்கள். 5,778 தேர்வர்கள் (25%). தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வில் மொத்தம் 27 நடமாடும் குழுக்கள், 8 பறக்கும் படை, 86 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வானது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல், சீரான முறையில் தேர்வு நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின் போது, பழனி சார் ஆட்சியர் திரு.சி.கிசான் குமார்,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.