மூடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024
.

செ.வெ.எண்:-06/2024

நாள்:-09.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2024) பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (09.06.2024) நடைபெறுகிறது.

அதன்படி, ஆத்துார் வட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 4,351 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3,477 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 874 நபர்கள் தேர்வு எழுதவில்லை. திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 48 தேர்வு மையங்களில் 12,733 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 9,918 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 2,815 நபர்கள் தேர்வு எழுதவில்லை. திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 36 தேர்வு மையங்களில் 9,825 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 7,781 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 2,044 நபர்கள் தேர்வு எழுதவில்லை. குஜிலியம்பாறை வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 1,571 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1,274 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 297 நபர்கள் தேர்வு எழுதவில்லை. கொடைக்கானல் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,124 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 825 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 299 நபர்கள் தேர்வு எழுதவில்லை. நத்தம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 2,739 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,231 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 508 நபர்கள் தேர்வு எழுதவில்லை. நிலக்கோட்டை வட்டத்தில் 34 தேர்வு மையங்களில் 8,896 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 7,037 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 1859 நபர்கள் தேர்வு எழுதவில்லை. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 3,976 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3,123 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 859 நபர்கள் தேர்வு எழுதவில்லை. பழனி வட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 9,958 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8,045 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 1913 நபர்கள் தேர்வு எழுதவில்லை. வேடசந்துார் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,442 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3,438 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 1004 நபர்கள் தேர்வு எழுதவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 228 தேர்வு மையங்களில் 59,615 தேர்வர்கள் தேர்வு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 12,466 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை 79.08 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.