மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை(28.08.2024) வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

செ.வெ.எண்:-78/2024

நாள்:-27.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை(28.08.2024) வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு(2024-2025) வரும் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு தலைவர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.ஜே.எபினேசர் (எ) ஜே.ஜான் எபினேசன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.கே.அமுல்கந்தசாமி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ஏ.பாண்டியன், ஆகியோருடன் செயலக அலுவலர்கள் வருகை தரவுள்ளனர்.

இக்குழுவினர், 28.08.2024 அன்று பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சியை பார்யிடுகின்றனர். அதனைத்தொடர்ந்து ரெட்டியார்சத்திரத்தில் கலைஞரின் கனவு இல்லம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11.30 மணியளவில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மீனவர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, 29.08.2024 அன்று கொடைக்கானலில் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் பின்னர் கொடைக்கானல் விருந்தினர் இல்லத்தில் காலை 10.00 மணியளவில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகத்தின் ஆண்டறிக்கைகள், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.