மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 20/09/2024
.

செ.வெ.எண்:-52/2024

நாள்:-19.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு (2024-2025) வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு(2024-2025) வரும் 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. குழு தலைவர் திரு.டி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், திரு.ஜி.தளபதி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.எம்.பூமிநாதன், திரு.எம்.கே.மோகன், திரு.எம்.சக்கரபாணி, திரு.ஆர்.மணி, திரு.எஸ்.ஜெயக்குமார், திரு.எஸ்.மாங்குடி, திரு.ஆர்.அருள் ஆகியோருடன் செயலக அலுவலர்கள் வருகை தரவுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு வருகையின்போது, பணி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை நிறைவாக முடித்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.