மூடு

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற சுற்றுலாத் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2024

செ.வெ.எண்:-36/2024

நாள்:-13.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற சுற்றுலாத் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகள் உட்பட 17 விருதுகளின் முதலாம் ஆண்டு விருது 27.09.2022 அன்றும், இரண்டாம் ஆண்டு விருது 27.09.2023 அன்றும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 27.09.2024 உலக சுற்றுலா தினத்தன்று தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 20.08.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 04542–241675, கைப்பேசி எண் 9176995867 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.