தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:- 57/2025
நாள்:-25.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சி அளித்திடவும் மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் படைவீரர் விருப்பம் தெரிவிக்கும் பயிற்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி பெற வாய்ப்பில்லாதபட்சத்தில் அருகில் உள்ள வேறொரு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பின்வரும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
1. CNC Programmer Cum Setter (Milling)
2. CNC Programmer cum Setter (Lathe)
3. CNC Operator
4. CNC Operator-Turning-Basic
5. Junior Technician-Automotive service (2&3 Wheelers)-Basicv
6. Manufacturing Process control & Automation Technician-Intermediate
7. Painting Technician using simulated learning Technique-Advanced
8. Jr.Robot Operator & Programmer Material Handling Intermediate
9. IT Product-Jr Designer
10. Hand Embroidary Artisan-Basic
11. Sewing Machine Operator Basic
12. Battery Electric Vehicle Jr.Technician Intermediate
13. Auto Electrical Maintenance Jr Technician-Basic
14. Graphic Designer
15. Plumbing Supervisor-Intermediate
16. Advanced Course for self Employed Tailors
17. IT Help Desk Attendant-Basic
18. Automotive CNC Operator Turning Basic
19. Mechanic Motor Vehicle-Basic
எனவே இத்திறன் பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், திண்டுக்கல் அவர்களை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.