மூடு

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – காலிப் பணியிடம் – மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026

செ.வெ.எண்:-46/2026

நாள்:-16.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சென்னை அவர்களின் கடித்தில், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும் மற்ற அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவதற்கும், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு கீழ்க்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கான தகுதிகள் கீழ்க்காணுமாறு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Co-ordinator) பதவிக்கான தகுதிகள்

Sl.No Name of the Post No. of Posts Mode of Recruitment Remuneration per month
1 District Banking Co-ordinator 1 Retired Bank Official Rs.50,000/-

 

எனவே, மேற்காணும் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் 25.02.2026 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி –

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரக வளாகம்,

திண்டுக்கல் மாவட்டம் – 624 004.

மின்னஞ்கல் முகவரி : dpiu_dgl@yahoo.com

தொலைபேசி எண் – 0451 – 2460050.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.