தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி 25.11.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-63/2024
நாள்:-25.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி 25.11.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மற்றும் வட்டாரங்களில் பாலினம் தொடர்பான பிரச்சனைகளை களைவது குறித்த செயல்பாடுகளை ”ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம் வன்முறைக்கு எதிராக” பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 முன்னெடுப்பது தொடர்பான பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை பாலின வன்முறை ஆகியவற்றால் தனிநபர் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உரிமைகள், உளவியல் சட்டம், மருத்துவம் தங்குமிடம் மறுவாழ்வு மற்றும் பிற ஆலோசனை ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் கிராமப்புற பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவு சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் தொடர்பாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் (Gender Resource Centre) குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை வட்டார மேலாண்மை அலகுகளில் 25.11.2024 இன்று முதல் பிரச்சார விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்கள், அனைத்து ஊராட்சிகளிலும் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0-வில் மேலும் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், போதை பொருள் பயன்பாடு, மது ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்தல், மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே, இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.