மூடு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திர

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025
.

செ.வெ.எண்:-72/2025

நாள்:-17.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.09.2025) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் தனிநபர் ஒத்துழைப்போடு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப்படுகிற அளவிற்கு தற்போது திட்டமிடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம். பெரிய நகரங்களுக்கு இணையாக விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் உள்ளார்கள். அதிகமான போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்களுக்கு ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் பல்வேறு வழிகளில் வழிகாட்டுதலும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சி ஒரு பெரிய திருவிழா போல் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 25,177 பள்ளி மாணவர்களும், 26,852 பள்ளி மாணவிகளும். 2,542 கல்லூரி மாணவர்களும், 2,605 கல்லூரி மாணவிகளும், 334 மாற்றுத்திறனாளி ஆண்களும், 193 மாற்றுத்திறனாளி பெண்களும், 1,336 பொதுமக்கள் ஆண்களும், 309 பொதுமக்கள் பெண்களும், 1768 அரசு அலுவலர்கள் ஆண்களும், 1684 அரசு அலுவலர்கள் பெண்களும் என மொத்தம் 62,800 நபர்கள் இணையவழியில் பதிவு செய்து போட்டியில் கலந்து கெண்டனர். இதில் 2,298 நபர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். 700-க்கும் மேற்பட்டோர் மாநில அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப்.இ.கா.ப, அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள், ஜி.டி.என் கல்லூரி தாளாளர் திரு.ரத்தினம் அவர்கள், தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் திரு.சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.