தமிழ் வளர்ச்சித் துறை (குறள் வினாடி வினா போட்டி)
செ.வெ.எண்:-09/2026
நாள்: 06.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் அவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026-ஆம் ஆண்டில் சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்த தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு/அரசு உதவி பெறும்/அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்) 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை/அனைத்து நிலை அலுவலர்கள்/ஊழியர்கள்) ஆக மொத்தம் 30 நபர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 09.01.2026-ஆம் நாளன்று (வெள்ளிக்கிழமை) 02.00 பி.ப. மணிக்கு, திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு வருகை புரிய வேண்டும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள துலங்கல் குறியீடு (Q R Code) வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்தும் பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
| பதிவு செய்வதற்கான துலங்கல் குறியீடு (Q R Code) |
மேலும் விவரங்களுக்கு | போட்டி விதிமுறைகள் துலங்கல் குறியீடு (Q R Code) |
![]() . |
உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். திண்டுக்கல் தொ.எண்- 0451-2461585 |
![]() |
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

