தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் உள்ள குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-71/2025
நாள்:-26.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் உள்ள குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கெரோனாவால் தந்தை இறந்த நிலையில் தாயார் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த சிறுவன் இப்ராஹிம் (16) மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவால் முன்னிலைப்படுத்தப்பட்டு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத்தில் இணைந்துள்ளார்.
இதே போன்று, சிறுமி பத்ரா (17) என்பவரின் தாயார் கேரளா மாநிலத்தில் வசித்துவரும் நிலையில், தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், அவர் சிறுமியை கவனித்து கொள்வதற்கு தயாராக இல்லை என்று தாயார் தெரிவித்தால், சிறுமி தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத் தெரு (மாடி), எஸ்.பி.ஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் – 624 004, தொலைபேசி எண் 0451-2904070’ என்ற முகவரியில் செயல்படும் திண்டுக்கல் குழந்தைகள் நலக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், எவரும் அணுகாத பட்சத்தில் அல்லது தொடர்பு கொள்ளாத நிலையில் கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவால் மேற்படி சிறுவன் இப்ராஹிம் (16) மற்றும் சிறுமி பத்ரா (17) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு இளைஞர் நீதி சட்டம் 2015-ன் படி தடையில்லா சான்று வழங்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு குழந்தைகள் நலக்குழுவினரை 0431-2413819, 9894487572 என்ற எண்களிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 0431-2413055, 6369102865, 8122201098 என்ற எண்களிலும் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.