மூடு

தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” என்ற சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026-யை மாவட்ட ஆட்சித் தலைவர

வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
.

செ.வெ.எண்: 94/2026

நாள்: 31.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” என்ற சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” என்ற சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026-யை இன்று (31.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

நிலையான, பாதுகாப்பான, மலிவு விலை மற்றும் பொறுப்பான நிதி சேவைகள் அனைவர் வசமும் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” –என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026 நடைப்பயணத்தில், பல்வேறு களஞ்சிய சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

பெண்களின் நிதி, சுயநிறைவு மற்றும் பாதுகாப்பான வங்கி சேவைகளின் பயன்பாடு சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகும். காப்பீடு, சேமிப்பு, ஓய்வூதியத் திட்டங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் அரசின் நிதி பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தும் வகையிலும், பெண்களின் நிதி சுயநிறைவு மற்றும் நீடித்த சமூக முன்னேற்றத்திற்கான முக்கியமான விழிப்புணர்வு முயற்சியாகவும் இப்பேரணி நடத்தப்பட்டு வருகிறது. நிதி கல்வி, பாதுகாப்பான சேமிப்பு, காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் வங்கி பயன்பாடு ஆகியவற்றை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த வாகத்தான் நடைபேரணியின் நோக்கமாகும்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெறும் இந்த வாக்கத்தான் நடைபேரணி–2026 மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை – புனித வளனார் மருத்துவமனை வழியாக சென்று ஈஸ்வரி ஸ்டோர் பின்புறம் உள்ள வி.சி.திருமண மண்டபத்தில் நிறைவடையும். மேலும், வி.சி.திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு மு.ராஜேஸ்வரி சுவி,திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் திரு. கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி காலின் செல்வராணி, கனரா வங்கி உதவி பொது மேலாளர் திரு.விஞ்சாமுரி ராகுல், மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. தேவநேசன், மூத்த வங்கி மேலாளர் திரு. எஸ். மகேந்திரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், சுயஉதவிக் குழு பெண்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.