மூடு

“திண்டி மா வனம்”

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026

செ.வெ.எண்: 44/2026

நாள்: 12.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு அரசின் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றான Green Tamil Nadu Mission (பசுமை தமிழ்நாடு இயக்கம்) திட்டத்தின் மூலம் மாநிலத்தின் பசுமை வளத்தை 22.67 இல் இருந்து 33% ஆக அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் மரம் நடதல் பணிகளில் அதிக அளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள், விழாக்காலங்கள் அல்லது பிற சிறப்பு நிகழ்வுகள் போன்ற தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து அதன் விவரங்களை Green Tamil Nadu Mission Portal (https://www.greentnmission.com/) மூலம் பதிவேற்றம் செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும், மரம் நடவு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை பதிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் “திண்டி மா வனம் (Dindi Ma Vanam) (https://thanvitechnologies.in/treeplanting/)” என்ற மாவட்ட அளவிலான செயலி உருவாக்கி உள்ளனர் இந்த “திண்டி மாவனம்” தளம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் மரம் நடவுகளை பதிவேற்றம் செய்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தை மேலும் பசுமையாக்கும் நோக்கில் பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகள் நடவு செய்து அதன் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து இந்த முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.