மூடு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2024

செ.வெ.எண்:-43/2024

நாள்:-20.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாடுகளை திரிய விடுவது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் தொந்தரவு ஏற்படுத்துவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகளை திரிய விட்டு பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையூறு இல்லாமல் தங்களது சொந்த இடத்தில் அடைத்து வைத்து சுகாதார முறையில் கழிவுகளை அகற்றி பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்கப்படுவதுடன், மாடுகளின் உரிமையாளருக்கு முதல் முறை மாடு ஒன்றிற்கு ரூ.2,000 வீதமும், இரண்டாம் முறை ரூ.5000 வீதமும், அபராதக் கட்டணம் விதிக்கப்படும். அதே உரிமையாளர் மீண்டும் மாடுகளை திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது. மாடுகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும் 1939ம் வருட தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவுகள் 41(1)(3)(4)(8) 42,43,45,47,51 மற்றும் 134ன் கீழ் உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.