மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024
.

செ.வெ.எண்:-82/2024

நாள்:-29.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.11.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பழனி ஆகிய இடங்களில் அறிவுசார் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கலில் 2730 புத்தகங்கள், பழனியில் 2140 புத்தகங்கள், கொடைக்கானலில் 2162 புத்தகங்கள் வாசகர் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டியிருக்கிறது. நூலகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்நூலகங்களில் இலவச இணையதள வசதிகள் உள்ளது. இந்நூலகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் காணொலி காட்சி வாயலாக போட்டி தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்நூலகங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இலவச இணைய தள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நூலகத்தில் 22 கணினிகளும், பழனி மற்றும் கொடைக்கானலில் தலா 10 கணினிகளும் வாசகர் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நூலகங்களில் குழந்தைகள் படிக்கும் பிரிவுகளும் உள்ளது. இரயில்வே பணித்தேர்வு, staff selection commission, Neet மற்றும் மத்திய மாநில அரசு தேர்வுகளுக்கு தயார் செய்ய தேவையான புத்தகங்களும் உள்ளது.

தற்போது நடைபெற்ற குரூப்-4 தேர்வில் திண்டுக்கல் நூலகத்தில் படித்து 22 மாணவர்களும், பழனியில் 10 மாணவர்களும், கொடைக்கானலில் 8 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள் எனவே, இந்நூலகங்களை பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் மேலும் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார், திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.ஜெ.சுப்பிரமணியன், கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.கே.தியாகராஜன், பழனி நகராட்சி நகர்நல அலுவலர் திரு.சு.ச.புவனேஷ்வரர், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் திருமதி ராஜேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி பிரபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.