மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.04.2025 அன்று நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 12/04/2025

செ.வெ.எண்:-33/2025

நாள்:-11.04.2025

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.04.2025 அன்று நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 17.04.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கம் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும், மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் இணைத்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.