மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப் பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
.

செ.வெ.எண்:-65/2025

நாள்:-14.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப் பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (14.11.2025) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து செய்முறை பயிற்சியினை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சிக்கந்தர் சுல்தான் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 93% வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகள் தொடர்ந்து 04.12.2025 வரை நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எழிமைபடுத்தும் வகையிலும், 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் (SIR) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து செய்முறை பயிற்சியினை வழங்கப்பட்டது. மேலும், கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) பூர்த்தி செய்து மீள பெறும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.