மூடு

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
.

செ.வெ.எண்: 19/2025

நாள்: 10.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி, காவேரியம்மாபட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, காவேரியம்மாபட்டியில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

சாணார்பட்டி ஊராட்சியில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் SCPAR திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார். கொசப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தவசிமடை ஊராட்சி, விராலிப்பட்டி முதல் பண்ணப்பட்டி வரை ரூ.3.03 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். கூவணுத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் காவேரியம்மாப்பட்டி பெரிய மருதமுத்து உடையார் குளத்தில் ரூ.9.23 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன் அங்குள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி பராமரிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிறுவப்பட்டுள்ள சிறிய நூலகத்தை பார்வையிட்டு புத்தகங்கள், பதிவேடுகள் வைப்பறை, கோப்புகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன், செயற்பொறியாளர் திரு.ஜான் பிரிட்டோ, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இளையராஜா, திரு.முருகானந்தம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.