மூடு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
.

செ.வெ.எண்:-105/2025

நாள்:-27.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக ரேபீஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்தாண்டு கொடைக்கானல் பகுதியில் செப்டம்பர் 26-ஆம் தேதி விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக கொடைக்கானலில் மனிதர்களில் ரேபீஸ் நோய் கண்டறியப்படாதது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, வரும் டிசம்பர் மாதத்தில் கொடைக்கானல் “ரேபீஸ் கட்டுப்பாட்டு மண்டலம்” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம், கோவாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் இரண்டாவது “ரேபீஸ் கட்டுப்பாட்டு பகுதி” என்ற பெருமையை தமிழகத்தில் கொடைக்கானல் பெற்றுள்ளது.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், “சமூகமே ஒன்றிணைந்து இன்றே தீர்மானிக்க வேண்டும்; நம் சமுதாயம் ரேபீஸை முழுமையாக ஒழிக்க வேண்டும்” என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆகும். “Zero by 30” என்ற உலகளாவிய குறிக்கோளை அடைவதற்கான முன்னோடித் திட்டமாகவும் இந்நிகழ்ச்சி கருதப்பட்டது. அதாவது 2030-க்குள் ரேபிஸ் இல்லாத கொடைக்கானல் உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை கொடைக்கானல் கால்நடை பராமரிப்புத்துறை, கொடைக்கானல் மாநகராட்சி, வனத்துறை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. இதில் பி.சி.கே. பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, பிருந்தாவன் பள்ளி, கேபிஎஸ் பள்ளி, கொடைக்கானல் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சென் பீட்டர் பள்ளி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 300 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் பூங்காவிலிருந்து கொடை பள்ளி மைதானம் வரை நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்வின் போது, கடந்த பத்து ஆண்டுகளில் கொடைக்கானலில் ரேபீஸ் கட்டுப்பாட்டில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது எனவும், தெரு நாய்களைவிட வீட்டு நாய்களே (90%) அதிகமாக ரேபீஸ் பரப்புகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டது. எனவே, செல்லப்பிராணி நாய்களுக்கு கட்டாயமாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், நாய் கடித்தவுடன் உடனடியாக “Post-Bite Exposure” தடுப்பூசி எடுப்பது அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுகரசு, துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி பிரியா, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, சுற்றுலா அலுவலர் திரு.கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.தங்கவேல், திரு.பாரதி, திரு.நவீன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபா ராஜமாணிக்கம் பல்வேறு துறை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.