திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.
செ.வெ.எண்:-05/2024
நாள்:-03.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (03.07.2024) திறந்து வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசனப் பகுதியில் முதல்போக விவசாயம் செய்வதற்கு, பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து இன்று முதல் கை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு (பேரணை முதல் கள்ளந்திரி வரை) வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும், என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 1797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 43,244 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ரேணுகா, செயற்பொறியாளர்(நீர்வள ஆதாரத்துறை) திரு.தமிழ்செல்வன், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.