திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:55/2025
நாள்:25.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 15-வது தேசிய வாக்காளர் தினத்தை(ஜனவரி 25-ஆம் தேதி) முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.01.2025) நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரித் திங்கள் 25-ஆம் நாளானது தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 15-வது தேசிய வாக்காளர் தினமானது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(25.01.2025) நடைபெற்றது. அனைத்துத் துறை அலுவலர்களும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, ”இந்தியக் குடிமக்களாகிய நாம், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற சுவர் இதழ் போட்டி, கட்டுரை, வினாடிவினா, ரங்கோலி போட்டிகளில் வெற்றி வெற்ற மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம், பூ மார்கெட், அரசு தலைமை மருத்துக்கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 600-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.