மூடு

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் கூட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026

செ.வெ.எண்: 59/2026

நாள்: 18.03.2026

திண்டுக்கல் மாவட்டம்1111

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election)
(15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்திண்டுக்கல் மாவட்டத்தில் 17.03.2026-அன்று 133-வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையான தங்கமாபட்டியில் உள்ள சோதனைச் சாவடியில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களால் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினருக்கு வாகன பரிசோதனையின்போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தக்க அறிவுரைகள் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களால் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.