திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.40.00 இலட்சம் உதவித்தொகையை 245 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

செ.வெ.எண்:-05/2025
நாள்: 02.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.40.00 இலட்சம் உதவித்தொகையை 245 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.40.00 இலட்சம் உதவித்தொகையை 245 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கத்தின் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு இணையாக அரசால் அதிகபட்சம் ரூ.20.00 இலட்சம் ஆண்டு தோறும் இணை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
2023-2024-ஆம் ஆண்டிற்கான இணை மானியத்தொகை ரூ.40.00 இலட்சத்தினை ஆதரவற்ற ஏழை, உடல் நலன் குன்றிய பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் சிறுதொழில் தொடங்குவதற்கு உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது.
அரசால் இணைமானியத் தொகையினை பயனாளிகளுக்கு வழங்க செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட 134 பயனாளிகளுக்கு ரூ.20.00 இலட்சமும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட 111 பயனாளிகளுக்கு ரூ.20.00 இலட்சம் என மொத்தம் ரூ.40.00 இலட்சம் 245 பயனாளிகளுக்கு உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுதாகர், கிறித்துவ மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் திரு.ஆல்பர்ட் பெர்னான்டோ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் மரு.பீர்முகமது மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.