திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள
செ.வெ.எண்:-93/2026
நாள்: 30.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இளைஞர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில், விளையாட்டு வீரர்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு திறமைகள் மட்டும் இருந்தால் போதும் விளையாட்டிற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு அரசின் மூலம் ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவில். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் 16 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிய ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த 25.01.2026 முதல் 27.01.2026 வரை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பாக நடத்ததப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து, இன்றை தினம் (30.01.2026) ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தடகளம் (100 மீ , குண்டு எறிதல்), கபாடி, கேரம் கையுந்துப்பந்து,கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் மொத்தம் 700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, நாளை (31.01.2026) ஊராட்சி ஒன்றிய அளவிலான எறிப்பந்து (பெண்கள் மட்டும்) போட்டியும் மற்றும் நேரடியாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோலப்போட்டி – 3 நபர்கள் ஒரு அணி (பெண்கள் மட்டும்), ஓவியப் போட்டி – மாற்றுத்திறனாளிகள் (கை, கால் ஊனமுற்றோர்) 100 மீ, மனவளர்ச்சி குன்றியோர் 100 மீ, செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 100 மீ, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் அனைத்து விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.
குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களை விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க செய்வதே இந்த ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரிலாக விளையாட்டுப் போட்டியின் நோக்கமாகும். மேலும், இதில் தனிநபர் போட்டிகள், குழுப்போட்டிகள் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டுள்ளது. ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கு போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலா முதல் பரிசு ரூ.6000, 2-ஆம் பரிசு ரூ. 4000, 3- ஆம் பரிசு ரூ. 2000 வீதம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா அவர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் திருமதி.கலா மற்றும் திருமதி.ரேகா அவர்கள் ஆகியோர் உட்பட விளையாட்டுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.