திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செ.வெ.எண்:94/2025
நாள்: 23.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.08.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக ”மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டம்” திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று(23.08.2025) நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் காந்தி மார்கெட், வார்டு எண்-13, சின்னாளபட்டி பூங்சோலை, சின்னாளப்பட்டி வார்டு எண்-14, உண்ணிச்செட்டியூர் பிரதான சாலை, ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட், பேருந்து நிலையம், மேலும், நிலக்கோட்டை மற்றம் வத்தலக்குண்டு மார்கெட் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி காந்தி மார்கெட் பகுதியில் 100 தூய்மை பணியாளர்களும், சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் 100 தூய்மை பணியாளர்களும், உண்ணிச்செட்டியூர் பிரதான சாலையில் 100 தூய்மை பணியாளர்களும், ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட் மற்றும் பேருந்து நிலையத்தில் 25 தூய்மை பணியாளர்களும், கொடைக்கானல் 23 தூய்மை பணியாளர்கள், வத்தலக்குண்டு 20 தூய்மை பணியாளர்கள், நிலக்கோட்டை 30 தூய்மை பணியாளர்கள் மூலம் நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நமது நாட்டின் நல்ல குடிமகனாகவும், பூமியில் பொறுப்புள்ள குடிமகனாகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்பதாக உறுதியளிக்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்தவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும் பின்வருவனவற்றைச் சிறந்த முறையில் செய்வதற்கு முயற்சிப்பேன்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள், முட் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் ஆகியவற்றை உபயோகிக்கமாட்டேன். நான் பிளாஸ்டிக் தாள்களால் சுற்றப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கமாட்டேன். நான் பிளாஸ்டிக்கினால் சுற்றப்பட்ட பரிசுகள் மற்றும் பூங்கொத்துகளை ஏற்கமாட்டேன். நான் துணி பை மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சுழலுக்கு உகந்த கரண்டிகள், முட்கரண்டிகள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கோப்பைகளையே எப்போதும் உபயோகிப்பேன். வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும் அகற்றுவதற்கும் தரம்பிரிபேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் தவிர்ப்பது குறித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாசுகட்டுபாடு செயற்பொறியாளர் திரு.ஆர்.குனசேகரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.