திண்டுக்கல் வருவாய் கோட்டம், நத்தம் வட்டம், செந்துரை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.10.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்: 62/2024
நாள்:25.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வருவாய் கோட்டம், நத்தம் வட்டம், செந்துரை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.10.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், நத்தம் வட்டம், செந்துரை கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில், கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.10.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நத்தம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.