மூடு

திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2025

செ.வெ.எண்:- 14/2025

நாள்:-07.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருநங்கைகள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் 2025-ஆம் நிதியாண்டில் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ஏப்ரல் 15-ஆம் தேதியன்று ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்று வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள், அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட தகுதிகளை உடைய திருநங்கைகள் தமிழக அரசின் விருதுகள் இணையதளம் (awards.tn.gov.in) வாயிலாக 10.02.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.