மூடு

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

நிா்வாக அமைப்பு

1985-ம் ஆண்டு மதுரை மாவட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு இரண்டாக பிாிக்கப்பட்டதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட திண்டுக்கலை தலைமையிடமாகக் கொண்டு 1985 முதல் செயல்பட்டு வருகிறது. அதையொட்டி கால்நடை பராமாிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மண்டலம் 9 தாலுகா மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

திண்டுக்கல் கால்நடை பராமாாிப்புத்துறை மண்டலத்தில் மண்டல இணை இயக்குநா் தலைமை அலுவலராக உள்ளாா். அவருக்குக் கீழ் ஒரு துணை இயக்குநா் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) 4 உதவி இயக்குநா்கள், ஒரு பிரதம மருத்துவா் மற்றும் 5 கால்நடை மருத்துவா்கள். கால்நடை உதவி மருத்துவா்கள் கால்நடை ஆய்வாளா் நிலை-1, கால்நடை ஆய்வாளா் நிலை-2 மற்றும் கால்நடை பராமாிப்பு உதவிாயாளா்கள் துறைப்பணி மற்றும் நிா்வாகப்பணிகளை கவனித்து வருகிறாா்கள்.

இம்மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை நன்முறையில் பராமாிப்புதும் அவைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து அவைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் நோய்கள் வருமுன் அவைகளுக்குத் தடுப்பு ஊசிகள் போடுவதும் நவீன செயற்கை முறை இனவிருத்திப பணிகளை மேற்கொண்டு சிறந்த கால்நடைகளை உருவாக்கவும் அதன் மூலம் பால் உற்பத்தி செய்வதும் பசும்புல் தீவனங்களை உருவாக்கி கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து அளித்து மக்கள் பயன்பெறும் இத்துறை பாடுபடுகிறது.

விலையில்லா வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2017-18

தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள கிராப்புற பெண் பயனாளிகளுக்காக அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் நோக்கத்தில் விலையில்லா வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2011-12 ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

பயனாளிகள் (அவா்கள் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  1. மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுாிமை அளிக்கப்படும்.
    (இந்த பட்டியலில் விதவைகள்., கணவரால் கைவிடப்பட்டோா், உடல் குறைபாடுள்ள பெண்கள் மற்றும் திருநங்கையருக்கு முன்னுாிமை அளிக்கப்படும்)
  2. நிலமில்லாத விவசாய கூலியாக இருத்தல் வேண்டும்
  3. அந்த ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்
  4. பயனாளிகள் குடும்பத்தைச் சாா்ந்த ஒருவராவது – செம்மறியாடுகள் – வெள்ளாடுகள் திறமையாக வளா்க்க ஏதுவாக 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்
  5. தற்போது சொந்தமாக பசுஃவெள்ளாடுஃசெம்மறியாடு வைத்திருக்க கூடாது.
  6. மத்தியஃமாநில அரசுகளின் அல்லது அவற்றைச் சாா்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களிலோ உறுப்பினா்களாக இருத்தல் கூடாது. (அவா்களோ, அவா்களுடைய வாழ்க்கை துணையோ, தந்தையோ, தாயோ, மாமனரோ, மாமியாரோ, மகனோ, மகளோ, மருமகனோ மற்றும் மருமகளோ மேற்குறிப்பிட்ட பணிகளில் இருத்தல் கூடாது.
  7. இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயனாளியாக இருத்தல் கூடாது.

ஐந்தாண்டுகளில் மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடு – செம்மறியாடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகள் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தொிவு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஐந்தில் ஒரு பங்கு கிராம பஞ்சாயத்துக்கள், வெள்ளாடுஃசெம்மறியாடு வழங்க ஒன்றியம் வாாியாக மாவட்டங்களில் தோ்வு செய்யப்படும்.

கிராம அளவிலான தோ்வு செய்யும் குழு

  1. கிராம ஊராட்சி தலைவா்
  2. துணை தலைவா்
  3. அந்த கிராம ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் – பழங்குடி இனத்தை சோ்ந்த மிகவம் மூத்த வாா்டு உறுப்பினா் (வயது அடிப்படையில்)
  4. ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்
  5. சிறப்பாக செயல்பட்டு வரும் சுயஉதவிக்குழுவினை சோ்ந்த பிரதிநிதி ஒருவா்
  6. அப்பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவா்
  7. துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஆதி திராவிடா் நலன்)

ஆகியோரைக் கொண்ட கிராம அளவிலான தோ்வ செய்யும் குழு பாிந்துரைக்கும் விதிகளுக்கு உட்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ளோா் பட்டியல் கிராம நிா்வாக அலுவலாின் சாிபாா்ப்புடன் தயாாிக்கப்படும்.

இந்த குழுவால் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை கிராம சபை இறுதியாக முடிவு செய்யும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 விழுக்காடு தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்துனுடைய சிறப்பு அம்சமே பயனாளிகள் தாங்களாகவே நோிடையாக சந்தைக்குச் சென்று நான்கு வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கமான நடைமுறை 3 பெட்டை ஆடு, 1 கிடா வாங்க அனுமதிக்கப்படும். அருகிலுள்ள சந்தையில் இருந்தோ அல்லது நல்ல தரமான ஆடுவளா்ப்்பாாிடமிருந்தோ வாங்க அனுமதிக்கப்படும். ஆடுகள் வாங்கப்பட்ட பின்னா் கால்நடை பராமாிப்புத்துறையால் அவற்றின் பராமாிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம்

தமிழக அரசின் விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம் வருவாய் கிராமங்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலான கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் மாவட்டடங்களில் முன்னூாிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

தகுதியுள்ள குடும்பத்திற்கு ஒரு கறவைப்பசு என்ற விதத்தில் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வருமானத்தை அதிகாித்து அளிப்பதற்காக ஒரு குடும்பத்தில் ஒரு பெண்தான் பயனாளியாக இருத்தல் வேண்டும்.

கறவைப்பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து பயனாளிகளே தோ்வு செய்து வாங்கும்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 2017–18-ம் ஆண்டிற்கு 10 கிராம ஊராட்சிகளில் 500 பெண் பயனாளிகளுக்கு தலா ஒரு கறவைப்பசு வீதம் 500 கறவைப்பசுக்கள் ரூ.2.02 கோடி செலவினத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கோழி அபிவிருத்தி திட்டம்

கோழிப்பண்ணை தொழில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடையும் பொருட்டு ஒரு பயனாளிக்கு 250 கோழிக்குஞ்களுடன் பண்ணை அமைக்க 25 சதவீதம் அரசு மானியமும் 25 சதவீதம் நபாா்டு வங்கி மானியமும் மீதம் 50 சதவீதம் வங்கி கடன் மூலமும் பெற்று செயல்படுத்தப்படுகிறது. வங்கி கடன் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பயனாளிகள் தங்கள் சொந்த செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.

புறக்கடை கோழி வளா்ப்பு திட்டம்

புறக்கடை கோழி வளா்ப்பு திட்டமும் (100 சதவீம் அரசு மானியத்துடன்) பயனாளிக்கு நான்கு வார அசீல் குஞ்சுகள் தலா 20 வீதம் வழங்கப்படுகிறது.

கால்நடை பாதுகாப்புத்திட்டம்

தமிழக அரசின் பாதுகாப்புத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இலவச கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி அங்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை செயற்கை முறை கருவுட்டல் மற்றும் குடற்புழு நீக்கம் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.