மூடு

“தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின்கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் சேலம், மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2025

செ.வெ.எண்:-23/2025

நாள்: 06.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

“தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின்கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் சேலம், மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தகவல்

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. அரசின் முக்கியத் திட்டமான “தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரிய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளைப் பெற்று, இளைஞர்கள் தங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும் என்று பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முகாம் 2025 நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று சேலம், மல்லூரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்கும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் ஜெர்மன் மொழி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள் (Allied Health Courses) மற்றும் டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் உள்ளிட்ட மதிப்புமிக்க பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இம்முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 33 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தகுதியுடையவர்கள் ஆவர். பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் அதிகபட்ச கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வர வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பழங்குடியின இளைஞர்கள் உடனடியாக https://forms.gle/1JwnHdFLDhmgvTiS8 என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 95785 62978 மற்றும் 96556 67547 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பழங்குடியின இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.