தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்: 75/2025
நாள்: 28.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தொழிலாளர் தினம் 01.05.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.