மூடு

நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் த

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

செ.வெ.எண்:-98/2025

நாள்:-25.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உரிய படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17.10.2025-க்குள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கான தகுதி விவரங்கள்

1. குறைந்தபட்ச வயது 21 (அதிகபட்ச வயது வரம்பு இல்லை)

2. மின்ஒயரிங் தொழிலில் ஐந்து (5) வருடத்திற்கு குறையாமல் செய்முறை அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் கீழ்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1. பின்புறம் விண்ணப்பதாரர் கையொப்பமிட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – இரண்டு

2. பிறப்புச் சான்றிதழ் நகல் (பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், நகராட்சி /மாநகராட்சியில் இருந்து பெறப்பட்டது.)

3. பணி அனுபவச் சான்றிதழ்

தேர்வுகட்டணம்

”0230-00- Labour and Employment-800-Other Receipt – AC Craftsman Training Scheme -27 -Non -Taxation Fees-13- Examination (DPC 0230-00-800-AC-22713) New IFHRMS Code (DPC0230-00-800-AC-22713)”

விண்ணப்பதாரர் தேர்வு கட்டணம் ரூ.200/ (ரூபாய் இருநூறு மட்டும்) மேற்கண்ட கணக்கு தலைப்பில் கருவூலகத்தில் (Treasury) செலுத்தி அதற்கான செலுத்துச்சீட்டின் அசல் உரிய படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.