நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:- 31/2025
நாள்:-08.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சி, அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் பொது நிதியிலிருந்து ரூ.9.65 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெண்கள் உடை மாற்றும் அறை கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்வச் பாரத் மிஷன் கிராமீன் (SBM-G) திட்டத்தின்கீழ் தலா ரூ.7.90 இலட்சம் மதிப்பீட்டில் நான்கு கழிப்பறை அறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றின் ஓரங்களில் செடி, கொடிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி சுகாதாரமாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆணைப்பட்டி நாச்சிகுளம் – செம்பட்டி பிரிவு ரோடு முதல் வைகை ஆறு ரோடு வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (MGSMT) ரூ.60.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சித்தர்கள் நத்தம் ஊராட்சி, விளாம்பட்டியில் 132 நபர்களுக்கு பட்டா வழங்க ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழ் ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது நிதியின் கீழ் ரூ.2.08 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி உட்கடை கிராமம் தொப்பிநாயக்கன்பட்டியில் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.C.வினோதினி,இ.ஆ.ப., நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) திருமதி பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) திருமதி பஞ்சவர்ணம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.