நேரு யுவ கேந்திரா
செ.வெ.எண்:-79/2024 நாள்:-28.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
நேரு யுவ கேந்திரா, மாவட்ட நிர்வாகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், திண்டுக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இளையோர் திருவிழாவானது எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 10.12.2024 அன்று நடைபெறவுள்ளது. நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் வெகு சிறப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த விழாவானது நடைபெற உள்ளது. இப்போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த பொன்னான வாய்ப்பை நமது திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இளையோர் திருவிழாவில் அறிவியல் கண்காட்சி. தனிநபர் போட்டி (முதல் பரிசு ரூ.3000இ 2ம் பரிசு ரூ.2000இ 3ம் பரிசு ரூ.1500) பரிசுகளும்இ அறிவியல் கண்காட்சி. குழுப் போட்டி (முதல் பரிசு ரூ.7000இ 2ம் பரிசு ரூ 5000இ 3ம் பரிசு ரூ.3000) பரிசுகளும், இளம் எழுத்தாளர் போட்டி – கவிதை, இளம் கலைஞர் போட்டி – ஓவியம், கைப்பேசி புகைப்பட போட்டி ஆகிய போட்டிகளுக்கு (முதல் பரிசு ரூ.2500, 2ம் பரிசு ரூ.1500, 3ம் பரிசு ரூ.1000) பரிசுகளும்இ பிரகடன பேச்சுப் போட்டி (முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.2500, 3ம் பரிசு ரூ.1500) பரிசுகளும், கலைத்திருவிழா – குழு நடனப்போட்டி (முதல் பரிசு ரூ.7000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள வயது 15 முதல் 29 வரை (அதாவது 30.09.2024 தேதியின் படி 15 வயது)· போட்டியில் பங்கு பெறலாம். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். கலைப்போட்டிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடைவர் ஆவார். இப்போட்டியில் கலந்து கொள்ள முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாவட்ட அளவிலான முன்பதிவிற்கு https://forms.gle/mY96QyUU3Cb26csk6 என்ற இணைய வழியில் அல்லது dyo.dindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 07.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டி நடைபெறும் நாளன்று போட்டியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்துடன், தங்களுடைய ஆதார், அட்டை அல்லது திண்டுக்கல் மாவட்டத்தை சோந்தவர் என்பதற்கான அடையாள அட்டை (அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒன்று) சமர்பிக்கப்பட வேண்டும். மேலும் தகவலுக்கு நேரு யுவ கேந்திரா அலுவலகம், நத்தம் மெயின் ரோடு, சிறுமலைப் பிரிவு, திண்டுக்கல்.3 என்ற முகவரியில் நோரிலோ அல்லது 7806916985, 0451-2904549, 7012403155, என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.