மூடு

“பசுமை சாம்பியன் விருது”

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026

செ.வெ.எண்: 43/2026

நாள்: 12.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் இன்று (12.03.2026) தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்ததாவது:-

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 03.09.2021-அன்று சட்டமன்றத்தில், 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1.0 கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள்/நிறுவனங்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் பரிசுத் தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை நீர் மேலாண்மை மற்றும் நீரிநிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவுதல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைத்தல், பிளாஸ்டிக், கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்போர் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்போர் நலச்சங்கம், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கும் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது பெறுவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, பசுமை சாம்பியன் விருது பெறுவதற்கு விண்ணப்பித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் பசுமை சாம்பியன் விருது பெறுவதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாஷ் நிறுவனம் (நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார நிறுவனம்), ஜி.டி.என். கலைக் கல்லூரி (தன்னாட்சி), சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 1 நிறுவனம் மற்றும் 2 கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான சான்றிதழ் மற்றும் தலா ரூ.1.00 இலட்சத்திற்கான பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர்.ப.ரமேஷ் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.