மூடு

பதிவுப் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

செ.வெ.எண்:-43/2025

நாள்:-11.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பதிவுப் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுப் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற ஆண், பெண் தொழிலாளர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே MASON (கொத்தனார்), BAR BENDER (கம்பி வளைப்பவர்) CAPBENDER (தச்சர்) ELECTRICIAN (எலக்ட்ரீசியன்), PLUMBER (பிளம்பர்), WELDER (வெல்டர்), BLACK SMITH (கருமான் கொல்லன்), GLASS WORK (கண்ணாடி வேலை), AC MECHANIC (ஏசி மெக்கானிக்), PAINTER (பெயிண்டர்), TILE LAYER (டைல்ஸ் ஒட்டுபவர்) AND MAZDOOR (கூலியாள்) உள்ளிட்ட 12 தொழில் பிரிவுகளின் கீழ் 7 நாட்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கிட அரசாணை (நிலை) எண். 57 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாபட்டுத் துறை நாள்.10.06.2025 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படி அரசாணையில் பயிற்சியில் கலந்து கொள்ளும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழுடன் நாளொன்றுக்கு ரூ.800/- வீதம் உதவித்தொகை மற்றும் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் 15.09.2025 அன்று திங்கட்கிழமை முதல் ஒருவார கால பயிற்சி முதல் அணி தொடங்கப்பட உள்ளது.

மேற்படி, திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பதாரர் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), தரைத்தளம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கட்டிடம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திண்டுக்கல் என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.