மூடு

பத்திக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2025

செ.வெ.எண்:-47/2025

நாள்:-15.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கீழக்கோட்டை, ஓடைத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பாண்டித்துரை, ஆண், வயது 43/2025 என்பவர் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லையில் வசித்து வரும் ஒரு இளம் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தினால் அவர் மீது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. எதிரி பாண்டித்துரை என்பவர் மேற்சொன்ன வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட வகையில் மேற்சொன்ன பாண்டித்துரை என்பரை தடுப்புக்காவலில் வைத்து உத்தரவிடக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பிரதீப்,இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று பாண்டித்துரை என்பவரை தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து பாண்டித்துரை என்பவர் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.