பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-24/2025
நாள்:11.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் ஆய்வுக்கூட்ட அறிவுரைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவர்) மற்றும் கோபால்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவியர்) ஆகியவை, தமிழக அரசின் சிறப்பு குழுவினரால் 06.10.2025 அன்று காலை ஆய்வு செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்களால் 10.10.2025 அன்று மாலை முறையே 07.00 மணி மற்றும் 07.45 மணிக்கு வேம்பார்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவர்) மற்றும் கோபால்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவியர்) ஆகியவை ஆய்வு செய்யப்பட்டபோது மேற்படி இரு விடுதிகளின் காப்பாளர் மற்றும் காப்பாளினி ஆகியோர்கள் உரிய உயர் அலுவலர்களிடம் முறையான முன் அனுமதி பெறாமலும், அவர்தம் விடுதிகளில் 10.10.2025 அன்று மாலை பணிபொறுப்பில் இல்லாததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.