பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-61/2025
நாள்: 14.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (தொழிற்பயிற்சி நிலை–II) பதவிகளுக்கான கணிணிவழித் தேர்வுகள் (CBT) 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் திண்டுக்கல் மையத்தில் உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, PVP பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு தேர்வுக்கூடங்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 190 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு நாளான 16.11.2025 அன்று தேர்வுக் கூடங்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வுக் கூடங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.