பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-01/2025
நாள்:-01.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குறுகிய கால பாசனகுளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள சிறுநாயக்கன்குளம், ஆயக்குடி பாப்பாக்குளம், துறைங்குளங்களான நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிறுவன்குளம், மாவூர் அணை ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள நீலமலைக்கோட்டை, ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் நரசிங்கபுரம், புல்வெட்டிக்குளம், அத்திக்குளம், ரெங்கசமுத்திரக்குளம் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள ஊமைசேர்வார்குளம், சோடப்பநாயக்கன்குளம் நத்தம் பகுதியில் அமைந்துள்ள பனங்குடி கண்மாய், ரெங்கநாதபிள்ளை குளம், காட்டுப்பெரியகுளம், நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஊமச்சிகுளம், பழனி பகுதியில் அமைந்துள்ள பங்காருசமுத்திரம் குளம் மற்றும் பாறைச்சின்னக்குளம் ஆகிய 17 குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியினை காணலாம்.
தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி : 0451-2900148, மின்னஞ்சல் : adfdglinl1@gmail.comமாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அலுவலக முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகம்,
80 அடி ரோடு,
நேரூஜி நகர்,
திண்டுக்கல் – 624001.
தொலைபேசி எண். 9751664565, 9994687689
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.