மூடு

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பிக்கவும் மற்றும் புதியதாக வழங்குவதற்கான முகாம் 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 20/06/2024

செ.வெ.எண்:-36/2024

நாள்:-19.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பிக்கவும் மற்றும் புதியதாக வழங்குவதற்கான முகாம் 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு 2024-2025 ஆம் நிதியாண்டுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பித்தும், புதியதாக வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று பேருந்து பயணச்சலுகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், உரிய விண்ணப்பங்களுடன் பார்வையற்றவர்கள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகலுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.