பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
![.](https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2024/06/2024061384-scaled.jpg)
செ.வெ.எண்:-14/2024
நாள்:-10.06.2024
திண்டுக்கல் மாவட்டம்
பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.