மூடு

பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

செ.வெ.எண்:-53/2025

நாள்:-17.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. தேசிய நில அதிர்வு மைய இணையதளத்தில் (National Center for Seismology-NCS) 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நில அதிர்வுகள் குறித்த பதிவுகள் ஏதும் காணப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்று தொடர்ந்து ஏற்படும் திடீர் ஒலியோசை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கோரிக்கையின்பேரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் தொடர்பான துறையின் நான்கு நிபுணர்கள் அடங்கிய குழு 01.04.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகபடியான சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும் அதற்கேற்றவாறு மாவட்ட நிருவாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்களை தெளிவுபடுத்திடும் பொருட்டும், மேற்காணும் நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்திட புவியியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு தேசிய நிலநடுக்கவியல் மையத்தைச் சோ;ந்த (National Center for Seismology) நிபுணர்கள் கொண்ட குழுவானது விரைவில் ஆய்வு செய்யவுள்ளனர்.

எனவே பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது, என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.