மூடு
பொதுத் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி – மாவட்ட ஆட்சியர் தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
செ.வெ.எண்:-26/2026                             நாள்: 06.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மாணவ/மாணவியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 11.03.2026 அன்று முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 349 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவியர் எழுத உள்ளார்கள்.
இதன் பொருட்டு, கடந்த புதன்கிழமை (04.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள 349 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவியருடனும் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது 23,538 மாணவ, மாணவியருக்கும் தனித்தனியாக வாழ்த்துக் கடிதம் (தபால் அட்டை) அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள 23,538 மாணவ, மாணவியருக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருண்மைகள் பின்வருமாறு:-
பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவிருக்கும் பதின்மப் பறவைகளே!
ஆண்டுக் கணக்கில் விதைத்த கல்வியெனும் பயிரை அறுவடை செய்யும் காலமிது. உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே பொதுத்தேர்வு. இதுவரை குடத்தில் இட்ட விளக்காக பள்ளி அளவில் ஒளிர்ந்த நீங்கள் குன்றிலிட்ட விளக்காக மாநில அளவில் ஒளிவீச பொதுத்தேர்வு ஒரு வாய்ப்பு.
தவம் போல் படித்தால் தவறாது வெற்றி!
கசடறக் கற்று களிப்புடன் தேர்வுக்குச் செல்லுங்கள்!
ஆசையாய் தேர்வு எழுதச் செல்லுங்கள்!
பெற்றோர், ஆசிரியர் ஆசியுடன் தேர்வில் வெல்லுங்கள்!
கற்றனைத் தூறும் அறிவு!
கல்வி மட்டுமே எவராலும் அழிக்க முடியாத ஆயுதம்…                                                                                                                                                                     இப்படிக்கு,
கற்கை நன்றே… கற்கை நன்றே…                                                                                                                                                                                             தம்பி மற்றும் தங்கைகளின்
முயற்சி திருவினையாக்கும்!                                                                                                                                                                                                      வெற்றிக்காகக் காத்திருக்கும்
உங்கள் கலெக்டர் அண்ணன்…
இதேபோல் கடந்த வாரத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் 21,419 மாணவ, மாணவியருக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.