மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.21.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024
.

செ.வெ.எண்:-41/2024

நாள்:-16.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.21.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(16.12.2024) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 218 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையதினம், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான கடனுதவி, தொழிலாளர் நலவாரியம் சார்பில் விபத்து மரண உதவித்தொகையாக 7 பயனாளிகளுக்கு ரூ.17.25 இலட்சம் மதிப்பிலும், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.1.80 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.7,000 மதிப்பிலான தையல் இயந்திரம் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.21.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாவட்ட, ஒன்றிய அளவில் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.5,000 மற்றும் மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000 பரிசுத்தொகை மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் மரு.கே.வாணீஸ்வரி, துணைப்பதிவாளர்(பால்வளம்) திருமதி பவனந்தி, உதவிப் பொதுமேலாளர் மரு.என்.பாபு, கூட்டுறவு சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.