மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026

செ.வெ.எண்:-19/2026

நாள்:-09.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2026) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்இ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் 2023 – 2024 மற்றும் 2024-2025 ஆம் நிதி ஆண்டுகளில் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைப்பதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.

சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் இயந்திரங்களை நிறுவுவதற்கு ரூ.18.75 லட்சம் மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகின்றது. முதல் தவணை 60% ரூ.11.25 இலட்சம் மற்றும் இரண்டாம் தவணை 40 சதவிதமாக ரூ.7.50 லட்சம் வழங்கப்படுகின்றன.

அதில் ஆத்தூர் வட்டாரம், காந்திகிராமத்தை சேர்ந்த பயனாளி திரு அபுபக்கர் சித்திக், நிலக்கோட்டை வட்டாரம் ஜம்புதுரைக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பயனாளி திரு. இக்னேஷியஸ் ஜெயக்குமார், திண்டுக்கல் வட்டாரம் தோமையார்புரத்தை சேர்ந்த பயனாளி திரு.சேனா குவாலிய தத்தா மற்றும் பழனி வட்டாரம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பயனாளி திரு.தங்கராஜா ஆகியோர்களுக்கு முதல் கட்ட மானியத் தொகை 60% மாவட்ட அளவிலான வேளாண் தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள் எண். FPI/18078/2022 நாள் 04.02.2026-ன்படி இரண்டாம் கட்ட 40% மானியத் தொகை விடுவிக்கும் பொருட்டு, திரு.அபுபக்கர் சித்தக் அவர்களுக்கு ரூ.6.93 இலட்சம், திரு.இக்னேசியஸ் ஜெயக்குமார் அவர்களுக்கு ரூ.7.50 இலட்சம், திரு.சேனா குவாலிய தத்தா அவர்களுக்கு ரூ.7.50 இலட்சம் மற்றும் தங்கராஜா அவர்களுக்கு ரூ.7.26 இலட்சம் மானியமாகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,09,400 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலிகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) திரு.ஜெ.சிவகுமார், உதவி ஆணையர் (கலால்) திரு.பிரபு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.