மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024
.

செ.வெ.எண்:-02/2024

நாள்:-01.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.07.2024) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.24,000 மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகள் ரூ.32,760 மதிப்பீட்டிலும், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.65,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலகில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமைக்கு 4 தனி வட்டாட்சியர்கள் மற்றும் ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.2,000 பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் படித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற திரு.ஆர்.சக்தி அவர்கள் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் இளநிலை கூட்டுறவுத் தணிக்கையாளர் பதவிக்கான ஆணையை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.